உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கம்பைநல்லுார் அம்ருதா மெட்ரிக் பள்ளியில் உயர்கல்வி கருத்தரங்கு

கம்பைநல்லுார் அம்ருதா மெட்ரிக் பள்ளியில் உயர்கல்வி கருத்தரங்கு

அரூர்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், உயர்கல்வி குறித்த கருத்தரங்கு நடந்தது. பள்ளி நிறுவனர் அருள்மாணிக்கம் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சுமதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். கருத்தரங்கில் சென்னை விது கேரியர் கைடன் பயிற்சி மைய நிறுவனர் பரணி குமார், 12-ம் வகுப்பிற்கு பிறகு உயர் கல்வியில் படிக்க வேண்டிய மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், பல் மருத்துவம்,தோட்டக்கலை, வனவியல், சட்டம், ராணுவ படிப்புகள், உணவு, பேஷன் டெக்னாலஜி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உட்பட பல்வேறு உயர் கல்வி படிப்புகள் குறித்து விளக்கினார். மேலும் உயர் கல்வி படிக்க நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் நுழைவு தேர்வுகள் குறித்தும் விண்ணப்பிக்கும் முறைகள், தேர்வுக்கு தயாராகும் விதம் குறித்தும் விளக்கி பேசினார். கருத்தரங்கில் பள்ளி மாணவ, மாணவியர் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் தமிழரசு, பாரதி, முருகன், கலாந்தர், சக்தி ஆகியோர் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர். ஆசிரியர் சிவம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை