ஹிந்து சமய அறநிலைத்துறையினர்10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த மணியம்பாடி வெங்கட்ரமணாசுவாமி கோவிலில், தர்மபுரி மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை துறை சார்பில், பொருளாதாரத்தில் பின் தங்கிய, 10 ஜோடிகளுக்கு மாவட்ட கலெக்டர் சதீஷ் திருமணத்தை நடத்தி வைத்தார். அவர்களுக்கு திருமாங்கல்யம், திருவிளக்கு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஹிந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் விமலா, தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, அறங்காவலர் குழு தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.