தொடர் மழையால் குறைந்த பட்டு விவசாயிகள் வருகை
தர்மபுரி: தர்மபுரியில் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்ததால், அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று விவசாயிகளின் வருகை குறைந்தது. நேற்று முன்தினம், 25 பேர் வந்த நிலையில் நேற்று, 7 பேர் ஏலத்துக்கு வந்திருந்தனர். இவர்கள், 12 குவியல்களாக, 309 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இது, 239 முதல், 502 ரூபாய் வரை சராசரியாக, 419 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 1.29 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் அரசுக்கு, 1,938 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.