உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து உயர்வு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து உயர்வு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையில் நேற்று முன்தினம் வினாடிக்கு, 355 கன அடி நீர்வ-ரத்து இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகு-தியில் பெய்த மழையால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 443 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து தென்-பெண்ணை ஆற்றில், 300 கன அடி, வலது, இடது வாய்க்காலில் பாசனத்திற்கு, 88 கன அடி என மொத்தம், 388 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 39.69 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை