இன்னோவாடெக் - பி.எம்.சி., டெக் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பி.எம்.சி., டெக் கல்வி குழுமம் மற்றும் சென்னையை சேர்ந்த இன்னோவாடெக் நிறுவனம் இடையே, தொழில்-நுட்ப கல்வியில் நிலைத்தன்மையை முன்நி-றுத்தும் முயற்சியாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு, இ.எஸ்.ஜி., எனப்படும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகி-றது. அத்துடன், காலநிலை எழுத்தறிவு, யு.என்.எப்.சி.சி.சி., மற்றும் பாரீஸ் அக்ரிமென்ட், கார்பன் நடுநிலைமை போன்ற உலகளாவிய கருத்துக்களுடன், இ.எஸ்.ஜி., சான்றிதழ் பயிற்-சியும் வழங்கப்பட உள்ளது.நிகர- பூஜ்யம் என்ற இலக்கை நோக்கி, தொழிற்து-றைக்கு தேவையான பசுமை ஆலோசகர்களை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும், இந்த கூட்டாண்மை, மாணவர்களை உலகளாவிய நிலைத்தன்மை திறன்களுடன் முன்னேற்றும் முக்கிய முயற்சியாகும் எனவும், மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், தொழில்து-றைக்கு வழிகாட்டுபவர்களாக உருவாகுவார்கள் என, பி.எம்.சி., டெக் கல்வி குழும தலைவர் குமார் தெரிவித்துள்ளார்.