அரசு பள்ளி சுற்றுச்சுவர் கட்ட வலியுறுத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பண்டாரசெட்டிப்பட்டி, பொம்மிடி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். இம்மாணவியருக்கு பள்ளி வளாகத்தில் கழிவறை உள்ளது. அப்பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இப்பகுதியில் முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களில் இருந்து பள்ளி வளாகத்திற்குள் விஷஜந்துக்கள் எளிதில் ஊடுருவுகிறது. இதனால் மாணவியர் கழிவறை செல்ல அச்சமடைந்துள்ளனர். எனவே, விரைந்து சுற்றுச்சுவர் கட்ட மாணவியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.