| ADDED : ஜூன் 12, 2024 07:35 AM
தர்மபுரி : அரசினர் தொழிற்பயற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தொழிற்பழகுனர் பயிற்சிக்கான ஆணையை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.தர்மபுரி, மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், தர்மபுரி மற்றும் அரூரிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, 100 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், தனியார் நிறுவனங்களில் பணிபுரிய நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், தர்மபுரி மற்றும் அரூரை சேர்ந்த, 281 பேர் பங்கேற்றனர். முகாமில், தர்மபுரியை சேர்ந்த தொழிற்பழகுனர் பயிற்சிக்கு, 159 பேரும், தனியார் நிறுவனங்களின் நேரடி வேலைவாய்ப்பு ஆணைகள், 87 பேருக்கும் வழங்கப்பட்டது. இதேபோல், அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு, 10 பேருக்கு பயிற்சிக்கான ஆணையும், தனியார் நிறுவனங்களின் நேரடி வேலை வாய்ப்புக்கான ஆணைகள், 25 பேருக்கும் வழங்கப்பட்டது. இதில், பயிற்சிக்கு செல்லும் மாணவர்களுக்கு, 15,000 முதல், 18,000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தங்குமிடம் மற்றும் இலவச உணவு வழங்கப்படும். நிகழ்ச்சியில், தர்மபுரி தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.