உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.10,000 லஞ்சம் ஏட்டுக்கு சிறை

ரூ.10,000 லஞ்சம் ஏட்டுக்கு சிறை

பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மதனேரிகொட்டாயை சேர்ந்தவர் சக்திகுமார், 36; இவர் மீதான கொலை மிரட்டல் வழக்கு, பாலக்கோடு ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளது. இதில் கைதாகாமல் உள்ள இவர், சரணடைய உள்ள நிலையில் முன் ஜாமின் பெற முயன்றார். இதற்காக, பாலக்கோடு ஸ்டேஷனில், கம்ப்யூட்டர் பிரிவு ஏட்டாக பணிபுரியும் சுரேஷ், 46, என்பவர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.சக்திகுமார், தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். நேற்று மாலை, 6:30 மணிக்கு, பாலக்கோடு ஸ்டேஷனுக்கு சென்று, 10,000 ரூபாயை, ஏட்டு சுரேஷிடம் கொடுத்த போது போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி