உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஸ்கூட்டரிலிருந்து விழுந்த நகைக்கடைக்காரர் சாவு

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த நகைக்கடைக்காரர் சாவு

தர்மபுரி, தர்மபுரி டவுன் துரைசாமி நாயுடு தெருவை சேர்ந்த சேகர், 70. இவர், தர்மபுரி டவுனில் நகை கடை வைத்துள்ளார். கடந்த, 11 அன்று மாலை, 6:45 மணிக்கு அவருடைய டி.வி.எஸ்., ஜூபிடர் ஸ்கூட்டரில் எஸ்.வி., சாலையில் சென்றபோது, தவறி கீழே விழுந்து காயமடைந்தார் தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் பின் மேல்சிகிச்சைக்கு பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். நேற்று முன்தினம் அதிகாலை, 3:45 மணிக்கு சேகர் உயிரிழந்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ