உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காளிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று

காளிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திலுள்ள காளிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கான மருத்துவ சேவை, தேசிய நலத்திட்ட செயல்பாடுகள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் தடுப்பு பணிகள், தாய் சேய் நலத்திட்ட தரவுகளின் அடிப்படையில் தேசிய தரச்சான்று பரிசீலனை குழு மருத்துவர்கள் லாவண்யா குமார் பட்னம், முத்துலட்சுமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் தரவுகளின் அடிப்படையில், 90.32 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று, தேசிய சுகாதார தரச்சான்று பெற்றது.இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரி சங்கர் தலைமையிலான மருத்துவக்குழு டாக்டர் வினோதினி, சுகாதார மேற்பார்வையாளர் சாதிக் பாஷா, மருந்தாளுனர் காமராஜ், சுகாதார ஆய்வாளர்கள் முரளி, அஸ்வின், செவிலியர்கள் நாகேஸ்வரி, கலைமகள், ஜோதி, சுமி ஆகியோருக்கு, தர்மபுரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் (பொ) பூபேஸ் பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ