2,500 மரக்கன்றுகளால் காமராஜர் உருவம்
தர்மபுரி, காமராஜரின், 123-வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தர்மபுரி அதியமான்கோட்டை, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஓவியத்துறை சார்பாக, 2,500 மரக்கன்றுகளை கொண்டு, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரால் காமராஜரின் உருவம் வடிவமைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் மூலம், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மரக்கன்றுகள் வளர்ப்பதால் இயற்கையும் சுற்றுச்சூழலும் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் காமராஜரை போல நற்பண்புகளுடன் சிறந்து விளங்க ஊக்குவிக்கப்பட்டனர். விழாவில், காமராசரின் கல்விப்பணிகள் குறித்து மாணவ, மாணவியர் பேசினர்.நிகழ்ச்சியில், செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் சிவராமகிருஷ்ணன், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.