உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 20 வருடம் சிறப்பான பணியாற்றிய ஊர்காவல் படையினருக்கு பாராட்டு

20 வருடம் சிறப்பான பணியாற்றிய ஊர்காவல் படையினருக்கு பாராட்டு

தர்மபுரி: ஊர்காவல்படை தினத்தை முன்னிட்டு,- சிறப்பாக பணிபுரிந்த ஊர்காவல் படையினருக்கு, மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.தமிழ்நாட்டில் ஊர்காவல் படை, 1963-ல் துவக்கப்பட்டு போலீசுக்கு உதவியாக, போக்குவரத்தை சரி செய்தல், திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல், தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள், சங்கங்களின் பொதுக்கூட்டம், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் நேரங்களில், பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஊர்காவல் படை வீரர்களின் பணியை பாராட்டும் விதமாக ஒவ்வொரு வருடமும் டிச., 6-ல் ஊர்காவல் படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், தர்மபுரி மாவட்டத்தில், 20- வருடம் சிறப்பாக பணி செய்த, 10- ஊர்காவல் படை வீரர்களுக்கு மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.அப்போது, மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு டி.எஸ்.பி., ராஜேஷ், தர்மபுரி மாவட்ட ஊர்காவல் படை வட்டார தளபதி தண்டபானி மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !