உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு மகளிர் பள்ளிக்கு ஆய்வக உபகரணங்கள்

அரசு மகளிர் பள்ளிக்கு ஆய்வக உபகரணங்கள்

தர்மபுரி : தர்மபுரி நகராட்சி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம், தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மாணவியர்களுக்கு அறிவியல் ஆய்வு உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளதாக, ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர். அதன் காரணமாக, தர்மபுரி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்க, நிதி ஒதுக்கீடு செய்து, நேற்று மாணவிகளின் பயன்பாட்டிற்கு உபகரணங்களை வழங்கி, அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, மாணவியருக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இதில், சி.இ.ஓ., ஜோதி சந்திரா, தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன், நகராட்சி கவுன்சிலர் சுரளிராஜன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ