மேலும் செய்திகள்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
13-Jun-2025
தர்மபுரி:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், கறுப்பு பேட்ஜ் அணிந்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் வெங்கட்டேசன் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட இணை செயலாளர் முரளிதரன், மாவட்ட துணைத்தலைவர் சின்னராசு ஆகியோர் பேசினர். நில அளவை பதிவேடுகள் துறையை தனியார் கையில் ஒப்படைக்கும் பணியின் வெள்ளோட்டமாக, புல உதவியாளர்களை தனியார் முகமை மூலம், பணியமர்த்துவது தொடங்கி இருக்கிறது. எனவே, வெளி முகமை மூலம், புல உதவியாளர்களை பணியமர்த்தும் அரசாணை, 297ஐ ரத்து செய்து, 3 ஆண்டுகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் அரசாணை, 420 திரும்ப பெற வலியுறுத்தி, கறுப்பு பட்டை அணிந்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13-Jun-2025