வாழ்வாதார இயக்க செயல்பாடு மாவட்ட கலெக்டர் ஆய்வு
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்-வாதார இயக்கம் சார்பில், ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். இதில், மகளிர் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும், மகளிர் சுய உதவிக்குழு அமைத்தல், வங்கி இணைப்பு ஏற்படுத்-துதல், பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாரா தொழில் நடவ-டிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, முதல்வரின் காலை உணவு திட்டம், மீட்கப்பட்ட கொத்தடிமைகள் திட்டம் மற்றும் திட்டம் சார்ந்து வழங்கப்படும் பயிற்சி குறித்து பணியா-ளர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.மேலும், மகளிர் திட்-டத்தின் செயல்பாடுகள் அதன் முன்னேற்றத்துக்கான ஆலோச-னைகளை பணியாளர்களுக்கு வழங்கினார். மகளிர் திட்ட இயக்-குனர் லலிதா உள்பட, உதவி திட்ட அலுவலர்கள், வட்டார மேலாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்