உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொப்பூர் கணவாயில் லாரி மோதி விபத்து

தொப்பூர் கணவாயில் லாரி மோதி விபத்து

தர்மபுரி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சக்திவேல், 45, தக்காளி லோடு ஏற்றிக் கொண்டு வந்தார். லாரி நேற்று மதியம், 12:20 மணிக்கு தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் வழியாக வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மற்றும் மற்றொரு லாரி மீது மோதி விட்டு, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணியில் ஈடுபடுத்தபட்ட ராட்சத கிரேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக, அங்கு பணியிலிருந்த நபர்கள் காயமின்றி தப்பினர். இந்த விபத்தால், தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. அங்கு வந்த தொப்பூர் போலீசார் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி குழுவினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ