மேலும் செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பேரணி
29-Jun-2025
பாலக்கோடு, பாலக்கோட்டில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், வட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநாடு நடந்தது. முன்னதாக பஸ் ஸ்டாண்டில் இருந்து கடைவீதி, தக்காளி மண்டி, பைபாஸ் சாலை வரை ஊர்வலமாக சென்றனர். மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தியோத்யா அன்ன யோஜனா திட்டத்தில் மாதம், 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
29-Jun-2025