மேலும் செய்திகள்
அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
20-Nov-2025
தர்மபுரி, : தர்மபுரி மாவட்டம், தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, எஸ்.ஐ., கேசவன் உட்பட போலீசார் நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு தொப்பூர் அருகே, மூலக்காடு கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பியோட முன்றார். அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்ததில், தர்மபுரி மாவட்டம், வெள்ளார் கிராமத்தை சேர்ந்த ரமேஷ், 38, என்பதும், அவரது பைக்கை சோதனை செய்தபோது, அதில் மூன்று கிலோ அளவிற்கு கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து ரமேஷை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
20-Nov-2025