மேலும் செய்திகள்
தடையை மீறி இறைச்சி விற்பனை
16-Jan-2025
அரூர்: அரூரில், வள்ளலார் நினைவு தினமான நேற்று, இறைச்சி கடைகள் செயல்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.காந்தி ஜெயந்தி, வள்ளலார் தினம், மகாவீர் ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதுடன், மதுபான கடைகள் செயல்பட கூடாது என்ற உத்தரவும் உள்ளது. அதன்படி, வள்ளலார் நினைவு தினமான நேற்று, தமிழகத்திலுள்ள அனைத்து மதுபானம் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி, தர்மபுரி மாவட்டம், அரூரில், பஸ் ஸ்டாண்ட், வர்ணதீர்த்தம், பாட்சாபேட்டை, திரு.வி.க., நகர் உள்ளிட்ட இடங்களில் மாடு, ஆடு, கோழி மற்றும் மீன் ஆகிய இறைச்சி கடைகள் வழக்கம் போல் இயங்கின. இவற்றை சுகாதாரத்துறையினரும் கண்டு கொள்ளவில்லை. மேலும், சந்துக்கடைகளில், 150 ரூபாய் மதுபாட்டில், 250 ரூபாய் என, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக குடிமகன்கள் புகார் தெரிவித்தனர்.
16-Jan-2025