உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மேட்டூர் அணை நீர்திறப்பு 10,000 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்திறப்பு 10,000 கன அடியாக உயர்வு

மேட்டூர்:சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, கடந்த, 12ல், முதல்வர் ஸ்டாலின், தண்ணீர் திறந்து வைத்தார். அன்று இரவு, வினாடிக்கு, 10,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர் திறப்பு, நேற்று முன்தினம் காலை, 6,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.பாசன நீர் தேவை அதிகரிப்பால், நேற்று காலை, 10:00 மணிக்கு, நீர்திறப்பு வினாடிக்கு, 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 114.92 அடி, நீர்இருப்பு, 85.59 டி.எம்.சி.,யாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 6,501 கனஅடி நீர் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி