ரூ.37.80 லட்சம் புதிய பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூஜை
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 27---கடத்துார் ஒன்றியம் தொங்கனுார், கோபிசெட்டிபாளையம் பகுதியில், 29 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு பள்ளிக்கு சுற்று சுவர், மேல் நிலை குடிநீர் தொட்டி, அமைக்கும் பணிக்கு, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., -கோவிந்தசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.இதேபோன்று, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொ.துரிஞ்சிப்பட்டியில், 12.40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டடத்தை திறந்து வைத்தும், வெள்ளாளப்பட்டி பகுதியில், 8.80 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தானியக்களம் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்தும் தொடங்கி வைத்தார்.இதில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா, ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், சேகர் ஒன்றிய குழு தலைவர் உதயா, பொம்மிடி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.