உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலை விதிகளை கடைபிடிக்க வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை

சாலை விதிகளை கடைபிடிக்க வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பாலானோர், ஹெல்மெட் அணியாமல் சர்வ சாதாரணமாக செல்வது வாடிக்கையாக உள்ளது.இதனால், விபத்து ஏற்படும்போது, உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, நேற்று, அரூர் போக்குவரத்து போலீசார், கச்சேரிமேட்டில், இருசக்கர வாகனங்களில் செல்வோரை நிறுத்தி, இனி டூவீலர்களில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும். சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கக்கூடாது. மொபைல்போனில் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என, அறிவுரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை