உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குறுகலான மயான பாலம்: தி.மு.க.,-எம்.பி., ஆய்வு

குறுகலான மயான பாலம்: தி.மு.க.,-எம்.பி., ஆய்வு

பாலக்கோடு,பஞ்சப்பள்ளி அருகே, ஊர் பொது மயானத்திற்கு செல்லும் குறுகிய பாலத்தை தி.மு.க.,- எம்.பி., மணி நேற்று ஆய்வு செய்தார்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பொது மயானம் உள்ளது. இந்த மயானம், பஞ்சப்பள்ளி ஆற்றின் மறுகரையில் அமைந்துள்ளதால், ஆற்றை கடந்து தான் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல வேண்டும். ஆற்றின் குறுக்கே, 3 அடி அளவு கொண்ட பாலம் மட்டுமே உள்ளது. பாலம் வழியாக இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சிறு பாலத்தை அகற்றி விட்டு, அகலமான பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் தர்மபுரி தி.மு.க.,- எம்.பி., மணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக, நேற்று பஞ்சப்பள்ளி மயான பாதையை எம்.பி., ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து, மயானத்திற்கு செல்ல, 16 அடியில் அகலமான புதிய பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ