உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா

பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 17---கடத்தூர் கிளை நூலகத்தில்,57 வது தேசிய நுாலக வார விழா நடந்தது. வட்ட தலைவர் டாக்டர் சந்திரசேகர் தலைமை வகித்தார். புலவர்கள் நெடுமிடல், சிவலிங்கம், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுாலகர் சரவணன் வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி, மாவட்ட நுாலக ஆய்வாளர் மாதேஸ்வரி பேசினர். தர்மபுரி மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற தலைவர் பாவலர் மலர்வணன் தலைமையில் நுாலகம் செல்வோம், நுால்கள் கற்போம் எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. புரவலர்கள் முருகன், சுப்ரமணி அருணாச்சலம், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ