தர்மபுரியில் 10 மையங்களில் நீட் தேர்வுக்கு ஏற்பாடு
தர்மபுரி:தர்மபுரி டவுன் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நீட் தேர்வு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது: தேசிய தேர்வு முகமையால், நீட் தேர்வு நாளை பிற்பகல், 2:00 முதல், 5:00 மணி வரை தர்மபுரி மாவட்டத்தில், 10 தேர்வு மையங்களில் நடக்கவுள்ளது. இதில், 4,800 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பஸ்கள் நின்று செல்ல, சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்குள் செல்லவும், கடைசி நேர அலைச்சல்களை தவிர்க்க, தேசிய தேர்வு முகமை விதிமுறைகளை முழுமையாக படித்து, கடைபிடிக்க வேண்டும்.தேர்வு நாளன்று, தேர்வர்கள் காலை, 11:00 மணி முதல், 1:30 மணி வரை மட்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டர். தேர்வு மையங்களுக்குள் மொபைல் போன் மற்றும் புளுடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எதுவும் எடுத்து வரவேண்டாம். தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்குள் செல்ல வேண்டும். இவ்வாறு கூறினார்.