தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு மையங்களில் நீட் பி.ஜி., தேர்வு
தர்மபுரி, :தேசிய தேர்வு வாரியத்தால், நடத்தப்படும் நீட் பி.ஜி., தேர்வு குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில், தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், நீட் பி.ஜி., -தேர்வு இன்று காலை, 9:00 முதல், 12:30 மணி வரை தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேவுள்ள, ஜெயம் பொறியியல் கல்லுாரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லுாரி ஆகிய இரு தேர்வு மையங்களில் நடக்கிறது. இதில், 245 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர்.தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்குள் செல்லவும், தேசிய தேர்வு முகமை விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்க வேண்டும். தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும், மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மையத்தில், தேர்வர்கள் மொபைல் போன் மற்றும் புளுடூத் உள்ளிட்ட மின்னனு சாதனங்கள் எதுவும் எடுத்து வர வேண்டாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.