உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடை திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 16பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 12.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. இதை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், நல்லதம்பி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி