உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குடிநீர் வரல; எம்.எல்.ஏ.,விடம் புகார்

குடிநீர் வரல; எம்.எல்.ஏ.,விடம் புகார்

தர்மபுரி, தொப்பூர் அருகே, கருங்கல்லுாரில் உள்ள பகுதிக்கு, 6 மாதங்களாக ஒகேனக்கல் குடிநீர் வரவில்லை, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் கோரிக்கை வைத்தனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட சுற்று வட்டார பகுதி மக்களிடம், குறைகளை கேட்டறிய பாப்பிரெட்டிபட்டி தொகுதி அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி நேற்று சென்றிருந்தார். அப்போது தர்மபுரி ஒன்றியம், கோடுஹள்ளி பஞ்.,க்குட்பட்ட கருங்கல்லுாரில், 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது அவர்கள், 'எங்கள் கிராமத்தில் குடிநீர், தெரு விளக்கு, மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுகிறோம். கடந்த, 6 மாதங்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இப்பகுதிக்கு வரவில்லை. இது குறித்து பஞ்., நிர்வாகத்திடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என, குற்றச்சாட்டு தெரிவித்தனர்.இது குறித்து, உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக, எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ