உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி படுகாயம்

ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி படுகாயம்

பாப்பிரெட்டிப்பட்டி, உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டம், மத்தயா கிராமத்தை சேர்ந்தவர் ராம்சாமோஜ். இவரது மகன் பீருதாதா, 28. இவர் உள்ளிட்ட உறவினர்கள் கடந்த, 25ல் உத்தரப்பிரதேச மாநிலம் துளசியூரில் இருந்து புதுடெல்லி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்சில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு வந்தனர். நேற்று முன்தினம் காலை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சென்னை - கோவை மார்க்கத்தில் சென்றது. புட்டிரெட்டிப்பட்டி அடுத்த, பொம்மிடி நோக்கி ஜாலியூர் அருகே செல்லும்போது, ஓடும் ரயிலில் இருந்து பீருதாதா நிலை தடுமாறி, கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார்.உயிருக்கு போராடியவரை அங்கு பணியிலிருந்த ரயில்வே ஊழியர்கள் ராஜேஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை