மேலும் செய்திகள்
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பரிமாற்றம்
20-Sep-2025
பென்னாகரம் பென்னாகரம் அடுத்துள்ள கூத்தப்பாடியில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்து வருகிறது. கடந்த, 26ல், துவங்கி, வரும் அக்., 2 வரை முகாம் நடக்க உள்ளது. இதில், மாணவர்கள், பெண் கல்வி பேரணி, நெகிழி விழிப்புணர்வு பேரணி, மரக்கன்று நடுதல், பள்ளி வளாகங்களை துாய்மை படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய உள்ளனர். முன்னதாக நேற்று, மாணவர்கள் ஏழு ஊர் மக்களுக்கு சொந்தமான கூத்தப்பாடி தர்மராஜர் கோவில் வளாகத்தை துாய்மை படுத்தினர். இரவில் பொதுசுகதாரம் விழிப்புணர்வு, பெண் கல்வி, பெண் சிசு கொலை உள்ளிட்ட விழிப்புணர்வு கலை நிகழ்சிகளும் நடந்தன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன் செய்திருந்தார்.
20-Sep-2025