உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சத்துணவு ஊழியர்கள்தர்ணா போராட்டம்

சத்துணவு ஊழியர்கள்தர்ணா போராட்டம்

தர்மபுரி:சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் கேட்டு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தேவகி தலைமை வகித்தார். மாநில செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட செயலாளர் அனுசுயா உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். 63,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.அரூர் டவுன் பஞ்.,ல் செலவிடப்பட்டவிபரங்கள் கோரி கவுன்சிலர்கள் மனுஅரூர்:அரூர் டவுன் பஞ்.,ல், கடந்த, 4 ஆண்டுகளில் செலவிடப்பட்ட நிதி விவரங்களை வழங்கக்கோரி, செயல் அலுவலர் நாகராஜியிடம், அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., கவுன்சிலர்கள் உட்பட, 8 பேர் மனு அளித்துள்ளனர்.அதில், அவர்கள் கூறியுள்ளதாவது:அரூர் டவுன் பஞ்.,ல், பொதுநிதியில் இருந்தும் மற்ற நிதிகளில் இருந்தும் கடந்த, 2021 - 24 வரை, 18 வார்டுகளில் இதுவரை செலவிடப்பட்ட பணிகள் விபரங்கள் மற்றும் செய்ய வேண்டிய விபரங்கள், இதுவரை வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரங்கள், கடந்த, 2021 - 24 வரை புதிதாக எத்தனை நபர்களுக்கு கட்டட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அரூர் டவுன் பஞ்.,ல், 55 லட்சம் ரூபாய் மதிப்பில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டது.அது எத்தனை இடங்களில் பொருத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் பங்கீடு தொகை, அரசின் பங்கீடு தொகை விபரங்கள். அரூர் டவுன் பஞ்.,ல், நவீன எரிவாயு தகனமேடை பராமரிப்பு செய்ய பொதுநிதியில், 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் ஒப்பந்ததாரர் விபரம், பராமரிப்பு செலவு விபரங்கள், பஸ் ஸ்டாண்டிலுள்ள வணிக வளாக கடைகள் பழுது பார்க்க மற்றும் பராமரிப்பு பணி செய்ய, பொதுநிதியிலிருந்து, 24.80 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. அதன் ஒப்பந்ததாரர் விபரங்கள் மற்றும் செலவின தொகை குறித்த ரசீது ஆகிய விபரங்களை தர வேண்டும்.இவ்வாறு, அதில் கேட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை