மேலும் செய்திகள்
காலம் கடந்த நாடகம்!
25-Sep-2024
சிமென்ட் சாலை நடுவில் குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்புகிருஷ்ணகிரி, அக். 2-கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் மாரசந்திரம் பஞ்., வீரோஜிப்பள்ளி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ராமர் கோவில் தெருவில் நேற்று புதிய குடிநீர் குழாய் அமைக்க ஒப்பந்ததாரர் சிமென்ட் சாலையின் நடுவே குழி தோண்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, கிராம மக்கள் கூறியதாவது: இங்கு ஏற்கனவே அனைவரின் வீட்டிலும் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. பஞ்., தலைவர் தன் சுய லாபத்திற்காக, புதிய குழாய் பதிக்க அனுமதி பெற்று, சாலையோரத்தில் குழாய் பதிக்காமல், சிமென்ட் சாலை நடுவில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் பதிக்கிறார். இதனால், 800 மீ., சிமென்ட் சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. பின்னர் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் எனக்கூறி, அதற்கும் அனுமதி பெறுவார். இவர், கிராம மக்களுக்காக கடந்த, 5 ஆண்டுகளாக இதுவரை எந்த ஒரு பணியையும் செய்து தரவில்லை. மாவட்ட நிர்வாகம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இது குறித்து மாரசந்திரம் பஞ்., தலைவர் முருகேசனிடம் கேட்டபோது, ''ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தவுடன், புதிதாக சிமென்ட் சாலையும் அமைக்கப்படும். கிராம மக்களிடம் பேசியதில், இப்பணியை செய்ய சொல்லி விட்டனர். என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட எதிரணியை சேர்ந்த 3 பேர், கிராமத்தில் எந்த பணியையும் செய்ய விடுவதில்லை. கடந்த, 3 மாதங்களாக ரேஷன் கடையை கட்ட விடாமல் தடுக்கின்றனர். நேற்று முன்தினம் கிராமத்தில் பழுதான லைட்டுகள் அனைத்தையும் மாற்றியுள்ளேன். தற்போது தேர்தல் வர உள்ளதால், என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இவ்வாறு நடந்து கொள்கின்றனர்,'' என்றார்.
25-Sep-2024