மேலும் செய்திகள்
கரூர் பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு அகற்றம்
24-Dec-2024
கடத்துார்: தர்மபுரி மாவட்டம், கடத்துார் நகரத்தில், 10,000க்கும் மேற்-பட்டோர் வசிக்கின்றனர். இந்நகர சுற்று வட்டாரத்தில் பல குக்கி-ராமங்கள் உள்ளன. இம்மக்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டத்திற்கு செல்லும் பய-ணிகள் ஏராளமானோர், தினமும் கடத்துார் பஸ் ஸ்டாண்ட் வரு-கின்றனர். ஆனால், அவர்கள் பஸ் ஸ்டாண்டில் அமர்வதற்கு கூட இடமின்றி சிரமப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து பரவலாக டூவீலர்கள் நிறுத்தப்படுவதால், பயணிகள், பஸ் ஏறி இறங்க கடும் அவதிப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்-படும் வாகனங்களால், பஸ் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.எனவே, வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதை தடுத்து, முறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடைக-ளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் தாண்டி, பயணிகள் அமரும் பகுதிகளிலும் கடைகளை விரிவுபடுத்தி, ஆக்கிரமித்து உள்ளனர். இதனால், பஸ் ஏற வரும் மாற்றுத்திறனாளிகள் கூட அமர முடி-யாமல் சிரமப்படுகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பயணிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
24-Dec-2024