மேலும் செய்திகள்
அரசுக்கு வரி செலுத்தாத 20 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
12-Oct-2024
தர்மபுரி, அக். 27-தர்மபுரி மாவட்டம், பாளையம் சுங்கச்சாவடியில் போக்குவரத்து துறையின் சார்பாக, சுரேஷ் இணை போக்குவரத்து ஆணையர் (செயலாக்கம்) தலைமையில், வேலுார் சரக வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் தர்மபுரி, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பகுதி அலுவலகங்கள் அரூர், பாலக்கோடு, ஆம்பூர் ஆகியோர் அடங்கிய குழுவினர், தமிழ்நாட்டிற்குள் வரி செலுத்தாமல், இயக்கக்கூடிய வெளிமாநில ஆம்னி பஸ்கள் குறித்து சோதனை மேற்கொண்டனர். இதில், 26 வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, 6.08 லட்சம் ரூபாய் வசூலித்தனர். மேலும், 6 வெளிமாநில ஆம்னி பஸ்களை சிறைப்பிடித்து, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியாக, 12.49 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், தமிழக அரசுக்கு, 18.57 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது குறித்து, தர்மபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளதாவது:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளிமாநில ஆம்னி பஸ்கள் அதிகளவில் இயக்கப்படும் என்பதால், தமிழ்நாட்டிற்கு வரி செலுத்தாமல், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படும், ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஆம்னி பஸ் உரிமையாளர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தி, பஸ்களை இயக்கலாம். இதில், விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதித்து, சிறைப்பிடிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
12-Oct-2024