உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காவிரியாற்றில் விடப்பட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்

காவிரியாற்றில் விடப்பட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்

ஒகேனக்கல்:தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பாக, பிர-தம மந்திரி மீன்வளம் மேம்பாட்டு திட்டத்தில், ஒகேனக்கல் காவி-ரியாற்றில், நாட்டின மீன் இருப்பு செய்து, உற்பத்தியை அதிக-ரிக்கும் வகையில், மீன் வகை குஞ்சுகள் விடும் விழா, ஒகே-னக்கல் முதலை பண்ணை எதிரே நேற்று நடந்தது.இதில், தர்மபுரி மீன்வள உதவி இயக்குனர் விஜயராகவன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி ஆகியோர் நாட்டின வகையை சேர்ந்த கட்லா, ரோகு, மீர்கால் உள்ளிட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை விட்டனர்.இதில், தர்மபுரி தலைமை மீன்வள ஆய்வாளர் பிரபாகரன், ஒகேனக்கல் மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி, பென்னாகரம் தாசில்தார் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ