உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மினி சரக்கு லாரியில் ஒரு டன் புகையிலை பொருட்கள் கடத்தல்

மினி சரக்கு லாரியில் ஒரு டன் புகையிலை பொருட்கள் கடத்தல்

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, மினி சரக்கு லாரியில், புகையிலை பொருட்-களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக, தமிழக அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் கடத்தி செல்வதாக, போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று காலை, புதிய தேசிய நெடுஞ்சாலையில், பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் எஸ்.ஐ.,க்கள் கோகுல், சரவணன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடகா மாநிலம் பெங்-களூருவில் இருந்து, தர்மபுரி நோக்கி வந்த மினி சரக்கு லாரியை, போலீசார் மடக்கி பிடித்து, சோதனை செய்தனர். அதில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு -டன் அளவிலான புகை-யிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. சரக்கு லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரித்ததில், அவர், சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே காட்டுவளைவு பகுதியை சேர்ந்த பாபர், 38 என்பதும், இவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்-தது. இது குறித்து, வழக்குப்பதிவு செய்த பாலக்கோடு போலீசார், டிரைவர் பாபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்-மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை