மேலும் செய்திகள்
தர்மபுரியில் பா.ம.க., கொண்டாட்டம்
16-Sep-2025
தர்மபுரி, மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம், தர்மபுரி நான்கு ரோடு அருகே புதிய இடத்தில், அதிக இடவசதியுடன் கூடிய ஷோரூமை நேற்று திறந்துள்ளது. இங்கு புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளின் கலெக்சன்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான 'மைன்', பிரம்மாண்டமான வடிவமைப்புகளுடன் வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட 'எரா', மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட 'பிரீசியா' கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட 'எத்தினிக்', நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் 'டிவைன்' குழந்தைகளுக்கான 'ஸ்டார்லெட்' போன்ற நகை தொகுப்புகள் உள்ளன.இந்த புதிய ஷோரூமை, தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி திறந்து வைத்தார். தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் மற்றும் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், வணிக தலைவர் சபீர் அலி, மேற்கு மண்டல தலைவர் நவுசாத், தர்மபுரி கிளை தலைவர் மனு எம்.நாயர் மற்றும் மேலாண்மை உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.திறப்பு விழா சலுகையாக வரும், 10ம் தேதி வரை, ஒவ்வொரு முறை தங்கம் வாங்கும் போதும், வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனத்திற்கு, 14 நாடுகளில் மொத்தம், 410 கிளைகளும், அதில் தமிழகத்தில், 32 கிளைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
16-Sep-2025