உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொது இடங்களில் வைத்திருந்த கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்

பொது இடங்களில் வைத்திருந்த கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்

அரூர்:தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி, மத ரீதியிலான கொடி கம்பங்களையும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அகற்ற அனைத்து உள்ளாட்சி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. அதன் படி, தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட பாட்சாபேட்டை, நான்குரோடு, கச்சேரிமேடு உள்ளிட்ட பொது இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்களை நேற்று டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.மேலும், பொக்லைன் வாகனம் மூலம், கொடி கம்ப பீடங்கள் இடித்து தகர்க்கப்பட்டது. தி.மு.க.,வினர் மட்டும் சில நாட்களுக்கு முன், தங்கள் கட்சி கொடி கம்பங்களை அகற்றி விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி