உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நடு ரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி

நடு ரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி

தர்மபுரி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, அரசு புறநகர் பஸ் பழுதாகி, நடுரோட்டில் நின்றதால், பயணிகள் அவதியடைந்தனர். சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து, தர்மபுரிக்கு அரசு புறநகர் பஸ் நேற்று காலை, 8:30 மணிக்கு வந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, எஸ்.பி., அலுவலகம் முன்புள்ள வேகத்தடையை கடந்தபோது, பஸ்சின் ஏர் ஓஸ் கட்டானதால், பஸ் நகராமல் நின்றது. இதனால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் தவித்தனர். அதையடுத்து, அவ்வழியாக வந்த மற்றொரு பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தர்மபுரி போக்குவரத்து கழக அலுவலகத்திலிருந்து வந்த ஊழியர்கள் பஸ்சை சரிசெய்ய, டிப்போவிற்கு எடுத்து சென்றனர். காலை நேரத்தில் பரபரப்பாக இருந்த, சேலம் - தர்மபுரி நெடுஞ்சாலையில், நடுரோட்டில் பஸ் பழுதாகி நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொலைதுாரம் செல்லும் புறநகர் பஸ்களை, அவ்வப்போது பழுது நீக்கி, இயக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ