உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் நிறுத்துவதால் பயணிகள் அவதி

பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் நிறுத்துவதால் பயணிகள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி::--தர்மபுரி மாவட்டம் கடத்தூரில், 10,000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகரின் சுற்று வட்டார பகுதிகளில் பல குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியினர் மட்டும் இன்றி வெளிமாவட்ட பயணிகளும், கடத்தூர் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர்.ஆனால், பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே பைக்குகள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பஸ் ஏறுவதற்கும், இறங்குவதற்கு கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் தாண்டி, பயணிகள் அமரும் பகுதிகளிலும் கடைகளை விரிவுபடுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பயணிகள் உட்கார இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை