/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் மக்கள், மாணவர்கள் தவிப்பு
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் மக்கள், மாணவர்கள் தவிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி-: கடத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பசுவாபுரம் ஊராட்சி சிவன-ஹள்ளி கிராம மக்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவ-சிய தேவைகளுக்கு மொரப்பூர், கடத்துாருக்கு செல்ல வேண்டும். ரயில்வே சுரங்கப்பாதையின் வழியாகத்தான் செல்ல வேண்டும். பெஞ்சல் புயல் மழையால் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்ல மக்களும், பள்ளி மாண-வர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அவர்கள் ரயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்-டிய நிலை உள்ளது.அதிகாரிகள் ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி, பொதுமக்கள் எளிதாக செல்ல வழிவகை செய்ய அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.