உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பழைய இறைச்சி விற்பனை தடுக்க மக்கள் வேண்டுகோள்

பழைய இறைச்சி விற்பனை தடுக்க மக்கள் வேண்டுகோள்

அரூர்: அரூரில், பழைய மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த ஆடு, கோழி இறைச்சிகளை விற்பனை செய்வதை தடுக்க, மக்கள்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: அரூரில், பெரும்பாலான கடைகளில், திறந்தவெளியில் இறைச்-சிகள் விற்பனை நடக்கிறது. மேலும், நோய் தாக்குதலில் இறந்த ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை குறைந்த விலைக்கு இறைச்சி கடைக்காரர்கள் வாங்குகின்றனர். அவற்றை அதிகாலையிலேயே சுத்தம் செய்து மக்களுக்கு விற்பனை செய்கின்றனர். குறிப்பாக, ஓட்டல் கடை உரிமையாளர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்-படுகிறது. இதேபோல், விற்பனையாகாத இறைச்சிகள் பிரிட்ஜில் வைத்திருந்து விற்கப்படுகின்றன. வெளியிடங்களில் இருந்து, கொண்டு வரப்படும் மீன்களும், குறைந்த பட்சம், 2 நாட்கள் வைத்திருந்து விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை சாப்பிடும் மக்கள், பல்வேறு உடல் உபாதை பாதிப்புகளுக்கு ஆளாகின்-றனர். எனவே, பழைய இறைச்சி விற்பனையை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ