உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய மக்கள்

அரூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய மக்கள்

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், ஈரோடு, கோவை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலுள்ள கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இதேபோல், ஏராளமானோர் வெளியிடங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். மேலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் கூலிவேலை செய்கின்றனர்.தீபாவளி விடுமுறையில் கடந்த வாரம், சொந்த ஊருக்கு வந்திருந்தனர். தொடர்ந்து, 4 நாள் விடுமுறை முடிந்து, தாங்கள் படிக்கும் இடங்களுக்கு மற்றும் பணியாற்றும் ஊர்களுக்கு செல்ல, சாரல் மழை பெய்த போதிலும், நேற்று மதியம், 3:00 மணி முதல், அரூர் பஸ் ஸ்டாண்டில், ஏராளமானோர் குவிந்தனர். பஸ் இருக்கையில் இடம் பிடிக்க முண்டியடித்து ஏறியதால், தள்ளு, முள்ளு ஏற்பட்டது.இதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் விடுமுறை முடிந்து, வெளியூர் செல்ல, நேற்று மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ