எரியாத தெருவிளக்கால் மக்கள் அவதி
மொரப்பூர், தர்மபுரி மாவட்டம், மொரப்பூரிலிருந்து, சிந்தல்பாடி செல்லும் சாலையில், தாசரஹள்ளி பிரிவு ரோடு அருகே ரயில்வே பாலம் உள்ளது.இதன் கீழே சுரங்கப்பாதை வழியாக, சிந்தல்பாடி, கர்த்தானுார், ராமியணஹள்ளி, தென்கரைகோட்டை, அ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் சுரங்கப்பாதை அமைந்துள்ள பகுதியில், தெரு விளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை என, அப்பகுதியினர் பஞ்.,ல் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, வேதனை தெரிவித்தனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கடந்த, 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவில், இருசக்கர வாகனங்களில் செல்வோர், முதியவர்கள் மற்றும் பெண்கள் இருட்டில் பீதியுடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது' என்றனர்.