கிராம சபை கூட்டத்தில் பி.டி.ஓ., சர்ச்சை பேச்சால் மக்கள் முற்றுகை
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், நார்த்தம்பட்டி பஞ்.,ல் சிறப்பு கிராம சபை கூட்டம் பஞ்., செயலர் ரமேஷ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், நார்த்தம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட மக்கள் ஏராளமானோர், பல மாதங்களாக குடிநீரின்றி தவிப்பதால், அதை கண்டித்தும், குடிநீர் கேட்டும், காலிகுடங்களை மட்டும் கிராம சபை கூட்டம் நடக்கும் இடத்தில் வைத்து விட்டு, கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்தனர். நல்-லம்பள்ளி பி.டி.ஓ., நீலமேகம், பொதுமக்களை கிராம சபை கூட்-டத்தில் பங்கேற்க அழைத்தார். தொடர்ந்து, கிராம சபை கூட்-டத்தில் காலிகுடங்களுடன் அமர்ந்திருந்த மக்களை பார்த்து, 'உங்கள் ஊரில் சாவு விழுந்து விட்டதா. ஏன் கிராம சபை கூட்-டத்திற்கு அனைவரும் காலிகுடங்களுடன் வந்துள்ளீர்கள்' என, சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரை முற்றுகை-யிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, குடிநீர் தொடர்பான கோரிக்கையை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறி, சமா-தானம் செய்தனர்.* பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்-சியில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், பி.டி.ஓ., அறிவ-ழகன் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., அபுல்கலாம் ஆசாத் முன்னிலை வகித்தார். இதே போன்று மோளையானுார், பொம்மிடி, பையர்நத்தம், பி.பள்ளிப்பட்டி உள்ளிட்ட, 19 ஊராட்-சிகளிலும் நடந்தது. மேலும் கடத்துார் ஒன்றியத்தில் உள்ள, 25 ஊராட்சி களிலும் கூட்டம் நடந்தது.* தமிழகம் முழுவதும் கடந்த, 2ம் தேதி நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. பென்னாகரம் அடுத்த பிளியனுார் மற்றும் சத்தயநாதபுரம் பஞ்.,ல் நடந்த கிராம சபை கூட்டத்தில் பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி மற்றும் பி.டி.ஓ., சத்திவேல் கலந்து கொண்டனர்.