உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

கலெக்டர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர் முகாம்தர்மபுரி, அக். 15-தர்மபுரி கலெக்டர் அலுவலக்தில், நேற்று நடந்த குறைதீர் முகாமில் பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டு, மொத்தம், 330 மனுக்களை பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் அளித்தனர். அம்மனுக்களை, உரிய துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். பின், அரூர் அடுத்த முத்தானுாரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். சொந்த நுாலகங்களுக்கு விருது வழங்கும் திட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் வீடுதோறும் நுாலகம் அமைத்து சிறப்பாக செயல்பட்டு வந்த, 26 வாசகர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தேர்வு குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மபுரி, என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் ஜெயக்குமாருக்கு சொந்த நுாலகங்களுக்கான விருது வழங்கப்பட்டது. மேலும், விண்ணப்பித்த அனைவருக்கும் பரிசுத்தொகை, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ