காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்ததையடுத்து, நேற்று குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்தது. தமிழக எல்லையான பிலுகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 10,000 கன அடியாக சரிந்தது. இந்நிலையில் மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சீராகி ரம்மி-யமாக கொட்டுகிறது. நேற்று முன்தினம் பரிசல் இயக்க அனுமதி வழங்கிய நிலையில், நேற்று குளிக்க மாவட்ட நிர்வாகம் அனு-மதி வழங்கி உள்ளது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் ஒகே-னக்கல் காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்-தனர்.