உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு பரிசல் பயணத்துக்கு அனுமதி

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு பரிசல் பயணத்துக்கு அனுமதி

ஒகேனக்கல்:ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று, 18,000 கன அடியாக குறைந்ததால், பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து, அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து, உபரிநீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு, 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 18,000 கன அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து சரிவால், மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்து ரம்மியமாக தண்ணீர் கொட்டுகிறது. இதையடுத்து, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் காவிரியாற்றில் பரிசல் இயக்க, ஐந்து நாட்களுக்கு பின் அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் காவிரியாற்றில் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஆனால், தொடர்ந்து ஆறாவது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி