உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொம்மிடியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வலியுறுத்தி கோரிக்கை மனு

பொம்மிடியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வலியுறுத்தி கோரிக்கை மனு

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடியில், எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தக்கோரி, பொம்மிடி ரயில் பயனாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆசாம் கான், ஜெயசிங், கார்த்திகேயன், முனிரத்தினம், சண்முகம் ஆகியோர், சேலத்தில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:சேலம்- - அரக்கோணம் இடையே இயக்கப்பட்ட மெமோ ரயில் சேவையை, ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வந்தனர். இது நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி, சேலம் மாவட்ட மக்கள், கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தப்பட்ட ரயில் சேவையை உடனடியாக, மீண்டும் இயக்க வேண்டும். பொம்மிடி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ள கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களை, பொம்மிடியில் நிறுத்த வேண்டும். அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் ரயிலை, சேலம் வரை நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி