உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நலிந்த கலைஞர்களுக்கு இசை கருவி தமிழக அரசு வழங்க கோரிக்கை மனு

நலிந்த கலைஞர்களுக்கு இசை கருவி தமிழக அரசு வழங்க கோரிக்கை மனு

தர்மபுரி, நலிந்த தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசின் சார்பில், இசை கருவிகள் வழங்க கோரி, தெருக்கூத்து பயிற்சி சங்க மாநில தலைவர் தலைமையில் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.இது குறித்து, மாநில தலைவர் லட்சுமணன் கூறியதாவது: கிராமிய கலைகள் அழிந்து வரும் நிலையில், அதை மீட்டெடுக்க, தர்மபுரி மாவட்டத்தில், நாட்டுபுற கலைஞர்கள், 2,000 பேர் சேர்ந்து நடத்தும், 'கலை விழா சங்கமம் மாநாடு' விரைவில் நடத்த உள்ளோம். அதில், மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு, மாநாட்டில் பங்கேற்கும் கலைக் குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்க கேட்டுக் கொள்கிறோம். நலிந்த தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசின் சார்பில், இசைக் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை